கொரோனாவுக்கு தங்கையின் கணவரை பறிகொடுத்த நகைச்சுவை நடிகர்  

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்தி வரும்  நிலையில் இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப் படுகின்றனர். மேலும் ஒரு நாளில் 3 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழக்கின்றனர். நாள்தோறும் பிரபலங்களும் பலரும் உயிரிழக்கின்றனர்.  முன்னதாகவே இயக்குநர் கே.வி ஆனந்த், நடிகர் பாண்டு உள்ளிட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் தனது தங்கையின் கணவர் உயிரிழந்துவிட்டதாக நகைச்சுவை நடிகர் பாலசரவணன் தெரிவித்துள்ளார். அன்பு நண்பர்களே இன்று எனது தங்கையின் கணவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார் அவருக்கு வயது 32. தயவுசெய்து மிக கவனமாகவும், விழிப்புணர்வுடனும் அனைவரும் இருங்கள். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்.


நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும் ஆகையால் தனி மனித ஊரடங்கு மேற்கொள்ளுங்கள். முக கவசம் கட்டாயம் அமையுங்கள் என இத்தகவலை  வலியுறுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவை நடிகர் பாலசரவணன் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com