தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின் – கட்சி தலைவர்கள் வாழ்த்து!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி பதவியேற்றுக் கொண்டார் ஸ்டாலின். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா சென்னை ராஜ் பவனில் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலினுக்கும் அவரது அமைச்சரவை அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

ஏப்ரல் 6-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 125 இடங்களை வென்றதுடன், காங்கிரஸ் உள்ளிட்ட நட்பு கட்சிளுடன் சேர்ந்து 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் மொத்தம் 159 தொகுதிகளைப் பெற்றது. அதிமுக 66 தொகுதிகளையும் அதன் கூட்டணிகளான பாஜக மற்றும் பாமக முறையே நான்கு மற்றும் ஐந்து இடங்களையும் வென்றது.

விழாவில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் மற்றும்  என 700 பேர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் பங்கேற்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course