கொரோனா நோயாளி இறந்ததால் ஆத்திரத்தில் மருத்துவர்களை தாக்கிய உறவினர்கள்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளி இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களை தாக்கியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் இரவு பகலாக சுழற்சி முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பாப்பாரப்பட்டியை சேர்ந்த 65 வயதான கொரோனா நோயாளி பியாரே ஜான் என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் ஜானுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கோகுலை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர்.


இதனை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும், மருத்துவரை தாக்க முயற்சி செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course