இன்றைய ராசிபலன் 07-05-2021

மேஷம்:

 விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக தான்  இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சல் இருந்தாலும் இன்று ஆதாயமான நாள்.

ரிஷபம்:  

 எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த நண்பர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:  1, 6, 9.

மிதுனம்:

உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள்.  திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:3, 5, 7.

கடகம்:

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வேற்று மதத்தவர்களும் நண்பர்கள் ஆவார்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:2, 6, 9.

சிம்மம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். உறவினர் முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.

கன்னி:

 சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்களின் உதவி கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

துலாம்:

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு  உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் முக்கிய  திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம்  செல்வாக்கு கூடும். அமோகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9.

விருச்சிகம்:

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பு அமையும். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்று மதத்தவர்களும் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 9.

தனுசு:

எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்:2, 5.

மகரம்:

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரசினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் உங்கள்  வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். வெற்றி பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:  2, 6, 9.

கும்பம்:

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.‌ அழகும், இளமையும் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7.

மீனம்:

 ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான வேலைகளை பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு இல்லாததால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com