முதலமைச்சசராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் முதலில் கையெழுத்திட்ட 5 அதிரடி திட்டங்கள்!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதல் நாளன்றே ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம், 2000 ரூபாய் கொரோனா உதவித்தொகை என வாரி வழங்கியுள்ளார். 

  • இன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் கொரோனா உதவி தொகை 4000 ரூபாயில்  முதற்கட்டமாக இம்மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும். தேர்தல் பரப்புரையின் போது ஜூன் 3-ஆம் நாள் உதவித்தொகை வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கருதி இந்த உதவியை இப்போதே அளித்துள்ளார்.

  • இதேபோல் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், இம்மாதம்  16ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • மேலும் அனைத்து மகளிரும் சாதாரண கட்டணம் கொண்ட நகரப் பேருந்துகளில் நாளை முதல்  இலவசமாக பயணிக்கலாம்.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் எடுத்துக் கொண்டால் அதற்கான தொகையை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து தமிழக அரசு வழங்கும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • பொதுமக்களின் புகார் அளிக்கும் மற்றும் கோரிக்கை மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வுகாண புதியத்துறை உருவாக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எந்திர திட்டத்தை உருவாக்கி அதற்கு ஒரு  ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course