நடந்து வரும் தமிழக 234 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பான நிலையில் நடந்து வருகிறது. நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கட்சி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலையில் திமுக – 142, அதிமுக – 91, அமமுக – 0, மநீமா – 1, நாதக – 0 ஆகிய நிலைப்பாட்டில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. துறைமுகம் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் முன்னிலை வகித்து வருகிறார்.
- எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் 26,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் எபினேசர் முன்னிலை.
- சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி முன்னிலை.
- பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே. பி. அழகன் முன்னிலை.
- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை.
- பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 2,583 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.
- போடி நாயகன் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பின்னடைவில் உள்ளார்.
- கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலை.
- சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







