அமெரிக்கர்களில் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்களிடம் பயணிக்க வேண்டாம் என லெவல் 4 எச்சரிக்கையை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது. இது குறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் கொரோனா பரவல் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருவதால், மக்கள் யாரும் இந்தியாவிற்கு பயணிக்க வேண்டாம்.

இந்தியாவிலிருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்க மக்களும் வெளிேயறுங்கள் என எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கடந்த வாரம் லெவல்-4 வகை எச்சரிக்கையை இந்தியாவுக்கு அனுப்பியது. இதன்படி இந்தியாவில் மிகவும் மோசமான, ஆபத்தான கொரோனா பரவல் இருப்பதால், யாரும் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. லெவல் 4 எச்சரிக்கை என்பது அமெரிக்க மக்கள் பயணம் குறித்து உச்சகட்ட எச்சரிக்கையாகும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







