கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்படும் போது மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்த தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ள நிலையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணிகள் நல்ல உடல் நிலையுடன் இருந்தால் கொரோனா பரிசோதனை தேவையில்லை என குறிப்பிட்டுள்ளது. கொரோனா பெரும் தொற்று உச்சத்தில் உள்ளதால் நாடு முழுவதும் உள்ள 2 ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் அத்தியாவசிய பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிகுறிகள் இல்லாதவர்களும் தங்கள் பயணங்களின் போது விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







