நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் லேப் டெக்னீசியன் மாணவர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகள் வழங்கப்படாததால் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் 2 ஆண்டுகள் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளை கொரோனா நோயாளிகள் தங்கும் அறையின் அருகே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும், முறையான உணவு வழங்கப்படவில்லை எனவும் குடிநீர், முககவசம் போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் இது தொடர்பாக புகார்கள் அனுப்பினால் சான்றிதழ் வாங்க முடியாதபடி செய்து விடுவதாக கல்லூரி நிர்வாகம் மிரட்டி வருவதாகவும் மாணவர்கள் குறிப்பிட்டனர். கொரோனா காலகட்டத்தில் கொரோனா நோயாளிகளை விட தாங்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






