இன்றைய ராசிபலன் 25-05-2021

மேஷம்:

பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்:  

பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உற்சாகமானநாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 6, 9.

மிதுனம்:

மற்றவர்களை  நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:3, 9.

கடகம்:

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைப் பற்றிஅவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். கடின  உழைப்பால் வெல்லும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 6.

சிம்மம்:

சொந்தபந்தங்கள் மதிக்கும் படி நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில  பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

கன்னி:

. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சாதுர்யமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 4, 6.

துலாம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் வீண் செலவு ஏற்படும். முன் கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க  வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 9.

விருச்சிகம்:

உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். எதிர் காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.‌ உத்தியோகத்தில் உயரதிகரிகளிடம் மோதல்கள் உண்டாகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 5.

தனுசு:

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சியை உயரதிகாரிகள் பாராட்டுவார். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள்; அதிர்ஷ்ட எண்:5, 6.

மகரம்:

புதிய பயணத்தை தொடங்குங்கள். பழைய உறவினர்கள்,  நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.  உறுதியாக ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:4, 6.

கும்பம்:

கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 9.

மீனம்:

 குடும்பத்தில் பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும். சந்திராஷ்டமம் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:3,9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course