தமிழகத்தில் இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்!

தமிழகத்தில் இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா  இரண்டாவது அலை பரவலை தடுக்க, இம்மாதம் 10ம் தேதி முதல், இன்று காலை 4.00 மணி வரை, சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

latest tamil news

முந்தைய ஊரடங்கில் மளிகை, காய்கறி, பழக்கடைகள் முதலில் மதியம் 12 மணி வரை இயங்கின. பின்னர் 15ம் தேதியில் இருந்து காலை 6 மணி முதல் 10 மணி வரையில் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டன. ஆனால், இப்போது தளர்வில்லா ஊரடங்கில் காய்கறி, மளிகை, பழக்கடைகளும் இயங்காது என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொது மக்களின் நலனைப் பேணுகிற வகையில் காய்கறி, பழ வகைகளை வீடு தேடிச்சென்று வாகனங்களில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும்  4,380 வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

தளர்வில்லா ஊரடங்கு; காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை வாகனங்கள் மூலமாக காய்கறி, பழங்கள் நேரடியாக விற்பனை; பொதுமக்கள் நலன்கருதி தமிழக அரசு ஏற்பாடு

இன்று முதல், ஒரு வாரத்திற்கு அனைத்து கடைகள் திறக்கப்படாது. மருந்தகங்கள், கால்நடை மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் மட்டுமே திறந்திருக்கும். உணவகங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும், ‘பார்சல்’ சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Life behind the barricades: Senior citizens face lockdown heat in Chennai- The New Indian Express

அரசு அலுவலகங்களை பொறுத்தவரை தலைமை செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும் மற்ற அலுவலகங்கள் செயல்படாது. தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாகனங்கள் எதுவும் இயங்காது. எனவே, பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து இந்த முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course