சென்னையில் உள்ள பி.எஸ்.பி.பி தனியார் பள்ளியில் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர் மீதும் அதனை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுக்குறித்து கனிமொழி வெளியிட்டிருக்கும் தனது ட்விட்டர் பக்க பதிவில் சென்னை பி.எஸ்.பி.பி தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சியுறச் செய்துள்ளது.
அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன். (3/3)https://t.co/xYLPEXM2ux
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 24, 2021
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டு கொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன் என அந்த ட்விட்டர் பக்க பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.