இன்றைய ராசிபலன் 24-05-2021

மேஷம்:

கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உடன் பிறந்தவர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்:  

உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.  வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும்.  வியாபாரத்தில் சில புதுமைகளைச் செய்து லாபம் ஈட்டுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:  1, 3, 5, 9.

மிதுனம்:

பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு  நனவாகும் நாள் .

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

கடகம்:

தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:3, 6, 9.

சிம்மம்:

 உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்: 6, 9.

கன்னி:

கணவன்-மனைவிக்குள் பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் . வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாற்றம் ஏற்படும் நாள் .

அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 2, 7.

துலாம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

விருச்சிகம்:

 எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பல முறை போராடி முடிக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில்  எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:1,3,9.

தனுசு:

 உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:சிவெளிர் நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்:4, 6.

மகரம்:

பிள்ளைகளால் மதிப்பு கூடும். உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். விலகி நின்றவர்கள் திரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

கும்பம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, பிரவுன்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6.

மீனம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுக பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, வெளிர் பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:1, 5, 6.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com