
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசா, மேற்குவங்க கடற்கரையை நோக்கி கரையை கடந்து வருகிறது. இந்த புயலின் தாக்கம், தமிழகத்தின் கன்னியாகுமரி வரை இருக்கிறது. கன்னியாகுமரியில் புயல், கனமழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. கோட்டார், புத்தேரி, வடசேரி உள்ளிட்ட பல இடங்களில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
![]()
இந்நிலையில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீன் குமார் அபிநபு நேரில் சென்று பார்வையிட்டார். தேங்காய்பட்டணம் துறைமுகம், குழித்துறை பாலம் போன்ற பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்ட அவர், பாதிப்பு குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த அவர் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரியில் மீட்பு பணிக்காக மாவட்டத்தில் உள்ள பேரிடர் மீட்பு படையினர் 140 பேரும், 144 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 30 பேரிடர் மீட்பு படையினரும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். இன்று திண்டுக்கல், தேனிமாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி பகுதியில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






