கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை நீடிக்கும்!

 கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

வானிலை முன்னறிவிப்பு: காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்! | Rainfall will continue in Southern districts of Tamilnadu | Puthiyathalaimurai - Tamil ...
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசா, மேற்குவங்க கடற்கரையை நோக்கி கரையை கடந்து வருகிறது. இந்த புயலின் தாக்கம், தமிழகத்தின் கன்னியாகுமரி வரை இருக்கிறது. கன்னியாகுமரியில் புயல், கனமழையால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. கோட்டார், புத்தேரி, வடசேரி உள்ளிட்ட பல இடங்களில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

11 கிமீ வேகத்தில் நகர்கிறது 'நிவர்' - இன்னும் 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் கனமழை நீடிக்கும்!

இந்நிலையில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீன் குமார் அபிநபு நேரில் சென்று பார்வையிட்டார். தேங்காய்பட்டணம் துறைமுகம், குழித்துறை பாலம் போன்ற பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்ட அவர், பாதிப்பு குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த அவர் உத்தரவிட்டார்.

Vellore gets heaviest rainfall in Aug in 110 yrs - DTNext.in
கன்னியாகுமரியில் மீட்பு பணிக்காக மாவட்டத்தில் உள்ள பேரிடர் மீட்பு படையினர் 140 பேரும், 144 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 30 பேரிடர் மீட்பு படையினரும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடிக்கும்:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். இன்று திண்டுக்கல், தேனிமாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

Cyclone Nivar in Chennai Tamil Nadu Live Tracker | The Financial Express

கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி பகுதியில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women