விசாகப்பட்டினத்தில் 14 -வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் டிக்டாக் பிரபலம் பார்கவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவன் டிக்டாக் பிரபலம் பார்கவ் நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு வந்ததால் பன்பக்கெட் பார்கவ் என்று அழைக்கப்பட்ட இவன் ஓமைகாட் ஓமைகாட் என்று பேசும் வீடியோக்கள் மூலம் பரவலாக அறியப்பட்டான்.

இந்த நிலையில் 14 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்த இவன் தன்னை காதலிக்க சொல்லி அச்சிறுமியை கட்டாயப்படுத்தி உள்ளான். ஆனால் சிறுமி அதற்கு மறுக்கவே உன்னுடைய புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. அதை பேஸ்புக்கில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் இதை பயன்படுத்தி சிறுமியை பார்கவ் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் விஷயத்தை தெரிந்து கொண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறை அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







