எடை கூடவே கூடாது என நினைப்பவர்கள் இந்த உணவுக்கு நோ சொன்னாலே போதும்

உடல் எடையை கோடைகாலத்தில்  குறைக்க விரும்புபவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி இந்த கட்டுரையில் காணலாம். உடல் எடையை கோடைகாலத்தில்  குறைக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


சீரான ஊட்டச்சத்து நன்கு பெற்ற உங்களுக்கு பிடித்தமான உணவுகளை நீங்கள் கொஞ்சமாக சாப்பிடலாம், இதுவே உங்கள் எடை இழப்புக்கு போதுமானதாக இருக்கும் என்பதுதான் உண்மை. ஆனால், நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் உங்கள் எடையை அதிகரிக்கவே செய்கின்றன. அதுவும் இந்த கோடைக் காலத்தில் உடல் எடை குறைப்பிற்கு எடுத்துக்கொள்ளும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இந்த கட்டுரையில் கோடைக் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

கார்போஹைட்ரேட்டுகள்

 

உங்கள் உணவில் பொதுவாகவே ஆரோக்கியமான சத்தாக  சேர்க்க வேண்டிய பொருளான கார்போஹைட்ரேட்டுகள் அவசியமான ஒன்றாகும். இருப்பினும், கார்போஹைட்ரேட்டுகள் உணவினை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் ஆரோக்கியமாக இருக்காது.

முழு கோதுமை மற்றும் மல்டிகிரெய்ன் போன்ற உணவுகள் பிரச்சனை இல்லை, ஆனால், வெள்ளை கார்ப்ஸ் அடங்கி இருக்கும் உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியது ஆகும். முக்கியமாக டயட் முறையினை பின்பற்றுபவர்கள் கண்டிப்பாக வெள்ளை கார்ப்ஸ் உணவுகளை தவிர்க்க வேண்டும். சரி என்ன என்ன உணவுகளில் வெள்ளை கார்ப்ஸ் அதிகம் கிடைக்கிறது என பார்க்கலாம். “சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வெள்ளை பாஸ்தா அல்லது ரொட்டிகளில் பொதுவாக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், நார்ச்சத்து, புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும்.”

​என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் உடலானது நாள் முழுவதும் செயல்பட எரிபொருளை வழங்குவதாகவும், உங்கள் செரிமானத்தை சீராக இயங்க வைக்க ஏராளமான நார்ச்சத்துக்களை வழங்குவதாகவும் அறியப்படுகிறது. முழு கோதுமை விருப்பத்திற்கு பதிலாக சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸை நீங்கள் தேர்வுசெய்யும்போது, உங்கள் உணவில் கார்ப்ஸை ஆரோக்கியமாக மாற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் போய்விடுகின்றன.

ஃபைபர் அல்லது கார்ப்ஸ் வழங்கும் பிற நன்மைகள் எதுவுமில்லாமல், நீங்கள் கலோரி அடர்த்தியான உணவை மட்டுமே உண்பீர்கள். இதன் காரணமாக, உங்கள் உணவுத் தேர்வுகளால் உங்கள் பசி திருப்தி அடையாததால், நீங்கள் அடிக்கடி அதிகமாக சாப்பிடுவதைக் காணலாம். இது போன்ற வெள்ளை ரொட்டி மற்றும் பாஸ்தா மட்டுமல்லாமல், அரிசி உங்களுக்கு வழங்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது ஆகும்.

 

​வெள்ளை அரிசி

வெள்ளை அரிசியில் கொழுப்பு மிகக் குறைவு, ஆனால் குறைந்த நார்ச்சத்து மற்றும் புரதமும் உள்ளது. 2016 ஆம் ஆண்டு ஈரானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், இளம் பெண் பருவத்தினரிடையே வெள்ளை அரிசி சாப்பிடுவதற்கும் உடல் பருமனுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிந்தது. வெள்ளை அரிசியில் அதிக கிளைசெமிக் குறியீடும் உள்ளது, அதாவது ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவை அது அதிகரிக்கும்.” ஆகையால், பழுப்பு அரிசி, தானியங்கள் போன்ற ஆரோக்கியமான தானியத்தை சாப்பிடுவதால் நல்ல ஆரோக்கியத்தை பெற முடியும். கொஞ்சமாக ஊட்டச்சத்துக்களை வழங்கும் வெள்ளை கார்ப்ஸை விட எடை குறைப்புக்கு தேவையான ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது நல்லதாகும்.

சிறுதானியங்கள்


இந்த பழுப்பு அரிசி, நவதானியங்கள், சம்பா, வரகு போன்ற உணவுகள் சுவையைத் தவிர்த்து, சாப்பிட்ட பின் முழுமையாகவும் திருப்தியாகவும் இருக்க தேவையான ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்கும். இதனால் நீங்கள் ஈர்க்கப்பட்டு மீண்டும் மீண்டும் அதையே சாப்பிடுவீர்கள்.

உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்த நினைக்கும்  நீங்கள் அதற்கான முயற்சியினை மேற்கொள்வதன் மூலம் வெற்றி பெறலாம்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top