நீங்கள் அசிடிட்டியால் அவதிப்படறீங்களா? உங்களுக்கான எளிய  ஆயுர்வேத வழிமுறைகள்!

ஆயுர்வேத மருத்துவம் அசிடிட்டியால் அவதிப்படுபவர்களுக்கு உரிய தீர்வு   குறித்தும் எளிய வழிமுறைகள் குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாக காணலாம். 

 சிகிச்சைகளை நோய் வந்தபின் மேற்கொள்வதைவிட, நோய் வரும் முன் காப்பதே மிகச்சிறந்தது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளது மிகச்சிறந்த கருத்து ஆகும். சரிவிகித உணவு மற்றும் நாள்தோறும் தவறாத உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் நம்மை ஆரோக்கியமாக இருக்க வைக்கும். சில வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் உணவு முறைகளும், நமது வாழ்நாளை மேலும் நீட்டிக்கச் செய்வதாகும். 

அசிடிட்டியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த கட்டுரையில் உள்ள நிவாரணம் பெறும் வழிமுறைகளையும் அதற்கான நெறிமுறைகள் குறித்து இங்கு விிரிவாக காண்போம்.

எவ்வாறு தடுப்பது?

அசிடிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகப்படியான மசாலா, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, எண்ணெய் கொண்ட உணவு வகைகளையும், பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

​என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?

அதிகமாக சாப்பிடக் கூடாத பழங்கள், புளிப்புத் தன்மை கொண்ட பழங்களை அறவே தவிர்க்க வேண்டும். பசியுடன் நீண்ட நேரம் இருக்கக் கூடாது. இதன் காரணமாக, அசிடிட்டி பாதிப்பு மிக விரைவில் ஏற்படும். மதிய உணவை கண்டிப்பாக தவிர்க்கக் கூடாது, எந்த நேர உணவையும் தவிர்க்காமல் இருத்தல் நலம். நேரம் தவறி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இரவு நேர உணவை, முடிந்தவரை சீக்கிரமாக சாப்பிடுவது நல்லது.

வெள்ளைப் பூண்டு, உப்பு, எண்ணெய், மிளகாய் அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், அதேபோன்று, அசைவ உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

சாப்பிட்ட உடன் படுப்பதை தவிர்க்கவும். அதேபோல் படுக்கும்போது எப்போதும் மல்லாந்து படுக்க கூடாது. ஒரு பக்கம், தலையை சாய்த்தவாறே படுக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், டீ, காபி அதிகமாக அருந்தும் பழக்கம், ஆஸ்பிரின் வகை மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தால், அதை உடனே கைவிட வேண்டும். மன அழுத்தத்திற்கு ஒருபோதும் இடம் தரக்கூடாது.

​அசிடிட்டிக்கான வீட்டு மருத்துவம்

கொத்தமல்லி கலந்த தண்ணீரை தொடர்ந்து அருந்தி வந்தால் செரிமானம் சீராகும் . உணவு சாப்பிட்ட பிறகு, பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால், செரிமானம் சிறந்த முறையில் இருக்கும். மதிய வேளையில், பெருஞ்சீரகம், கல் உப்பு கலந்து தயாரித்த தண்ணீரைபருகி வரலாம்.

முதல் நாள் இரவு உலர் பழங்களை தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில்  அருந்தவும். வெதுவெதுப்பான பாலை இரவு படுக்க செல்லும் முன் ஒரு தேக்கரண்டி அளவு பசுநெய் கலந்து குடிக்கவும். இது தூக்கமின்மை மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வு ஆகும். பன்னீர் மற்றும் புதினா தண்ணீரை அவ்வப்போது அருந்தி வரவும். இதன்மூலம், செரிமானம் சீராகும்.

சீசன் பழங்கள்

இனிப்பு மாதுளம் பழங்கள், வாழைப்பழங்கள், சுண்ட வைத்த ஆப்பிள்கள், பிளம்ஸ் பழங்கள், உலர் பழங்கள், ஏப்ரிகாட் பழங்கள், தேங்காய் என அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தாராளமாக அருந்தி வரவும்.

​அற்புத ஆயுர்வேத பானங்கள்

நெல்லிக்காய் ஜூஸை நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 மில்லி அளவில் குடித்து வரவும்.நெல்லிக்காய் பவுடர் : மதிய உணவு உண்பதற்கு முன் அரை தேக்கரண்டி அளவிற்கு நெல்லிக்காய் பொடி சாப்பிட்டு வரவும்.

சதாவரி 

தினமும் ஒரு தேக்கரண்டி சதாவரியை பாலுடன் சேர்த்து அருந்தி வரவும். காலையில் அதிமதுரம் வேர் பொடியை ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலை, மாலை என சோற்றுக் கற்றாழை சாற்றை, 20 மில்லி அளவிற்கு வெறும் வயிற்றில் இரு வேளைகளுக்கு அருந்தவும்.

​மேலும் என்ன செய்ய வேண்டும்?

போதுமான அளவு ஓய்வு எடுத்து தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். சரியான அளவிற்கு உறங்க வேண்டும். யோகா, பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும். சீதாலி, சிட்காரி, அனுலோமா விலாமா, பிரமாரி உள்ளிட்ட பிரணாயாம முறைகள், அசிடிட்டியை திறம்பட எதிர்க்க வல்லதாக உள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com