நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?… அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும்?

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு உணவில் டயட் செய்வது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் அவை உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகள் சிறந்ததாக கருதப்படுகிறது. இதனால் உடலின் குளுக்கோஸ் அளவை அதிக அளவில் கட்டுப்படுத்துகின்றன.

 

பிஸ்தா:

நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா போன்ற நட்ஸ்களை உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை 27 சதவீதம் குறைக்கிறது. அவற்றில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. பிஸ்தா, நீரழிவு நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. 

பிஸ்தாவின் பயன்கள்:

பிஸ்தாவில் நல்ல கொழுப்புகள் மற்றும் ஃபைபர், மெக்னீசியம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு உணவாக இருப்பதால் இவை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவும் சத்துக்களைக் கொண்ட முதல் 50 உணவுப் பொருட்களின் பட்டியலில் பிஸ்தாவும் ஒன்று. 

குறைந்த கலோரிகள்:

மற்ற நட்ஸ்களுடன் ஒப்பிடும்போது பிஸ்தாவில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பிஸ்தாவை சாப்பிடும் போது ஆரோக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைவான கலோரிகளை மட்டுமே உட்கொள்வதை ஊக்குவிக்க பிஸ்தா உதவுகிறது.

கிளைசெமிக் குறியீட்டில் குறைவாக:

கிளைசெமிக் குறியீட்டில் குறைந்த அளவு கொண்ட உணவுகள் உடலில் குளுக்கோஸ் அளவை திடீரென அதிகரிப்பதைக் குறைக்கின்றன, ஒரு நபரை நீண்ட நேரம் முழுதாக எனர்ஜியாக வைத்திருக்க உதவுகிறது, மற்றும் உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்பதுவும் இது உதவுகிறது. 

​நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகம்:

மற்ற நட்ஸ்களுடன் ஒப்பிடும்போது பிஸ்தாக்களில் மோனோ- மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவை உடலின் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன மற்றும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. 

​ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம்:

பிஸ்தாவில் இருக்கும் பல்வேறு சத்துக்கள் மூலம் அவை இன்சுலின் உற்பத்திக்கு காரணமான கணையத்தின் பீட்டா செல்களைப் பாதுகாக்க உதவுகிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் பிற தீங்கு விளைவிக்கும் விளைவுகளை தடுக்கவும் உதவுகிறது.

வீக்கத்தை குறைத்தல்:

நீரிழிவு நோயில் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக வீக்கம் அதிகமாக ஏற்படுகிறது.  பிஸ்தாவில் காலிக் அமிலம், கேடசின் மற்றும் லுடோலின் போன்ற சத்துகள் இருப்பதால் பிஸ்தாக்களுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவுகின்றன. 

நார்ச்சத்து அதிகம்:

பிஸ்தாக்கள் மற்ற நட்ஸ்களுடன் ஒப்பிடும்போது அதிக நார்ச்சத்து மற்றும் கொழுப்புகளை உள்ளடக்கி இருப்பதால் உடலின் குளுக்கோஸை உறிஞ்சுவதை குறைப்பதன் மூலமும், உடலில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதன் மூலமும் நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது. 

இதயத்திற்கு நல்லது:

கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைக் குறைப்பதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க பிஸ்தா உதவும், இதனால் கொலஸ்ட்ரால் மாற்றம், உயிரணுக்களின் செயல்பாடு மற்றும் இரத்த அழுத்தம், இதய நோய்களைத் தடுக்க தேவையான அனைத்து காரணிகளும் மேம்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் 2-4 மடங்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

மெக்னீசியம் மற்றும் அர்ஜினைன் அதிகம்:

பிஸ்தாவில் உள்ள மெக்னீசியம் மற்றும் அர்ஜினைனின் அளவு அதிகமாக இருப்பதால் இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. அர்ஜினைன் குளுக்கோஸை சுமார் 40 சதவீதம் எரிக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் மெக்னீசியம் குறைபாடுடன் காணப்படுகிறார்கள்.

பிஸ்தாவின் தினசரி உட்கொள்ளல்:

பிஸ்தாக்களின் தினசரி உட்கொள்ள வேண்டிய அளவானது 28 கிராம் அல்லது 49 கர்னல்கள் ஆகும். இது சுமார் 160 கிலோ கலோரி ஆற்றலை வழங்க உதவும். பிஸ்தாக்கள் மட்டும் போஸ்ட்ராண்டியல் கிளைசீமியாவில் குறைவான விளைவைக் கொண்டிருந்தன. அதிக கார்ப்ஸைக் கொண்ட அரிசி, பாஸ்தா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவுகளில் அவற்றைச் சேர்ப்பது, உணவுக்குப் பிறகு குளுக்கோஸ் ஸ்பைக்கைக் குறைக்க இது உதவுகிறது.

 

நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த நட்ஸ்கள் சிறந்தது?

நீரிழிவு நோயானது குளுக்கோஸ் அளவு அதிகரிப்பு மற்றும் இன்சுலின் மாற்றங்களால் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பிஸ்தா பயன்படுகிறது. குறைந்த கலோரிகள், குறைந்த கிளைசெமிக் குறியீடு, உயர் ஃபைபர் மற்றும் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற தனித்துவமான ஆக்ஸிஜனேற்றங்கள் காரணமாக பிஸ்தாக்கள் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 

பிஸ்தாவை அதிகமாக உட்கொள்வது வயிற்று பிரச்சினைகள், வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு, எடை அதிகரிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

 

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course