தலைமுடி உதிருகிறதா? இந்த மூலிகை இலைகளை அரைத்து ஹேர் பேக் போடுங்கள்!

தலைமுடி பராமரிப்பில் எண்ணெய் குளியல் , கூந்தல் தைலம் , ஹேர் பேக்குகள் – (hair pack)  பயன்படுத்தி என பல்வேறு விதமாக கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறோம். இந்த வரிசையில் மூலிகை இலைகள் கொண்டு எவ்வாறு கூந்தல் வளர்ச்சியை தூண்டுவது என்று பார்ப்போம்.

 

 

கறிவேப்பிலை முடி உதிர்வதை தடுக்குமா?

இரும்புச்சத்து , வைட்டமின்கள் நிறைந்த கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் தலைமுடி உதிர்வது குறையும். கறிவேப்பிலையை அரைத்து சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

துளசி மற்றும் கற்பூரவல்லி சாறு :

துளசி மற்றும் கற்பூரவல்லி இலையை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து வடிகட்டி அதனை தலைக்கு தேய்த்து ஊறியதும் தண்ணீரில் கழுவ வேண்டும். பொடுகு தொல்லை நீங்கும் என்பதால் முடி உதிர்வது குறையும்.

 

 

 தலைமுடி உதிர்வது குறைய கொத்தமல்லி சாறு:

கொத்தமல்லி இலை சாறினை எடுத்து அதனை தலையில் தடவி வர முடி கொட்டுவது நிற்கும்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் வேப்பிலை நீர் :

சுலபமாக கிடைக்கும் மூலிகை  வேப்பிலையை வேகவைத்து அந்த நீரை தலைக்கு குளிக்க பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது குறையும்.

 தலைமுடிக்கு கற்றாழை :

கற்றாழை மடலின் சாறினை எடுத்து தலையில் தேய்த்து குளித்து வர உடல் சூடு குறைந்து பொடுகு நீங்கி முடி நன்கு வளரும்.

தலைமுடி உதிராமல் இருக்க செம்பருத்திப் பூ சாறு மருத்துவம்:

 செம்பருத்திப் பூ அல்லது இலையை அரைத்து சாறு பிழிந்து கொண்டு அந்த சாறினை முடி கொட்டிய இடத்தில் தேய்த்து குளித்து வர  முடி வளரத் தொடங்கும்.

 

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com