புதினாவின் மருத்துவ பயன்கள்!

புதினா ஒரு பழங்காலத்தில் இருந்தே சமையலில் பயன்படுத்தும் மூலிகையாகும். ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பரவி இன்று உலகெங்கும் பயிரிடப்படுகிறது. மருத்துவக் குணங்களுடன் மனதை தூண்டும் மணத்தையும் இம்மூலிகை பெற்றுள்ளது.

Mint


எல்லா உணவு வகைகளிலும் குறிப்பாக அசைவ உணவுகளில் மணம் ஊட்ட இதனை சேர்க்கின்றனர். இதனை பயிர் செய்வது என்பது எளிது என்பதால் புதினாவின் பயன்பாடும் அதிகம்.

தொட்டியிலேயே புதினாவை வளர்த்தலாம் என்பதால் கிச்சன் கார்டனுக்கு ஏற்றது. இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்ததால் தான் இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என முன்னோர்கள் வழிகாட்டி உள்ளார்கள் போல.

உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளில் புதினா பயன்படுகிறது. கிரேக்க மருத்துவர்கள் வயிற்றுக் கோளாறுகள் மருந்தாகப் பயன்படுத்தினர்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாகவே பயன் படுத்துகின்றனர்.

இன்றளவும் கூட இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மருத்துவ பயன்கள் :

* வயிற்று உபாதைகள்
வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை என செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்து தொல்லைகள் விலகும். ஆகவே தான் அசைவ உணவுகளை சமைக்கும் போது புதினாவை அதிக அளவில் சேர்க்கிறார்கள்.

* கொழுப்பை கரைப்பதால் உடல் தொப்பை, பருமன் குறைகிறது.

* சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் போது  உடனடி நிவாரணம் பெறுகின்றனர்.

* தோல் பிணிகள், முகப்பரு நீங்கி சருமத்திற்கு பொலிவை தருகிறது.

* ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மூலிகை.

* உலர்ந்த புதினாவை பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும்.

அன்றாடம் புதினாவை எப்படி பயன்படுத்துவது?
Mint Extract

புதிதாக பறித்த புதினா இலைகளை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒரு கப் சாற்றில் எலுமிச்சை சாறு, தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். உடல் குளிர்ந்து புத்துணர்வு கிடைக்கும்.

புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து உண்ணலாம். கர்ப்பிணி பெண்களின் மசக்கைக்கு புதினா ஏற்றது.முரணாக சில பெண்களுக்கு புதினா வாசனையே குமட்டும்.

புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்ய வேண்டும்.

பச்சையாக மென்று புதினா சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம்.

தினமும் காலையும் மாலையும் தேயிலைக்குப் பதிலாகப் புதினாத் தூளைப் பயன்படுத்தித் தேநீர் தயாரித்து அருந்தினால் ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் ஏற்படும்.


Mint is a refreshing herb which is also a great appetizer. It also promotes digestion and soothes the stomach in case of indigestion or inflammation. Mint is often an ingredient in gum, candy or tea, but people also eat it fresh. Fresh mint leaves add flavor and nutrition to many different recipes, and chewing on whole leaves may have certain health benefits. It is an anti-inflammatory for the lungs. Mint leaves contain salicylic acid, which treats and prevents acne. It gives energy to hair and helps to maintain natural pH of scalp. It can be taken as juice along with lemon and honey or made as chutney.


scroll to top