தகாத உறவு காரணமாக கணவரை கொலை செய்த மனைவி, தடம் மாறிய கல்லூரி மாணவர்..

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோ பால், வேன் டிரைவராக இவர் வேலை பார்த்து வந்துள்ளார். லியோபாலுக்கு சுஜிதா  மேரி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சென்னையில் வசித்து வந்த லியோ பாலுக்கு கொரோனா  காரணமாக வேலை போனது, இதனால் இந்த தம்பதி சொந்த ஊருக்கு சென்று குழந்தைகளுடன் வசிக்க தொடங்கியுள்ளனர். 

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதும் லியோ பால் சென்னை வந்து மீண்டும் கார் ஓட்ட தொடங்கியுள்ளார். மனைவி சுஜிதா மேரி சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். அப்போது பக்கத்துக்கு வீட்டில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ராதாகிருஷ்ணனுக்கும் லியோபாலின் மனைவி சுஜிதா மேரிக்கும் தகாத உறவு ஏற்பட்டது. 

 

லியோ பால் இதை தெரிந்து கொண்டு மனைவியை கண்டித்துள்ளார், சுஜிதா மேரி ராதாகிருஷ்ணன் உடனான தொடர்பை கைவிடவில்லை. இதனால் சொந்த ஊருக்கே திரும்பி  மனைவியுடன்  வசிக்கத் தொடங்கினார், இதனால் சுஜிதா மேரியும், ராதாகிருஷ்ணனும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் உறவுக்கு தடையாக இருக்கும் லியோ பாலை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். 

இந்த நிலையில் மது போதையில் வீட்டுக்கு வந்து உறங்கிக்கொண்டிருந்த லியோ பாலை ராதாகிருஷ்ணன் இரும்பு கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார், பின்னர் வீட்டுத் தோட்டத்துக்குள் குழிதோண்டி புதைத்துள்ளனர். இதையடுத்து லியோ பாலின் மனைவி தனது மாமனார் சகாயராஜ் இடம் கணவரை காணவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சகாயராஜ் போலீசில் புகார் கொடுக்கலாம் என்று மருமகள் இடத்தில் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து விக்கிரவாண்டியில் உள்ள மருமகள் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வீட்டில் சுஜிதா மேரி இல்லை குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளன. குழந்தைகளிடத்தில் விசாரித்தபோது அம்மாவை காணவில்லை என்று அப்பாவியாகக் கூறினர்.

வீட்டுத்தோட்டத்தில் புதிதாக அறையும் குறையுமாக பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதை பார்த்த சகாயராஜ் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். பள்ளத்தை தோண்டி பார்த்தபோது உள்ளே லியோ பாலின் சடலம் இருந்தது. விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராதாகிருஷ்ணன் மற்றும் சுஜிதா  மேரியை  தேடி வந்தனர்.

இந்த நிலையில் கேரளாவில் ராதாகிருஷ்ணனின் உறவினர்  வீட்டில் தங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். ராதாகிருஷ்ணன்  அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே ஒரு கொலை செய்துள்ளேன் அதே பாணியில் லியோ பாலை கொலை செய்தேன் என்று கூறியுள்ளான் . ராதாகிருஷ்ணன் இதற்கு முன்னதாக யாரைக் கொலை செய்தான் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

scroll to top