தூக்கமின்மையால் உடலில் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்படும் …

ஏழு முதல் எட்டு மணி நேர ஆழ்ந்த தூக்கம் சிறுநீரகங்களை ஒழுங்காக ஒருங்கிணைக்க உதவுவது மட்டும் இல்லாமல் மோசமான தூக்க முறைகள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இன்சுலின் எதிர்ப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய், மோசமான ஹார்மோன் ஒழுங்கு முறையில் ஏற்படும் பசியின்மை என பல நோய்களுக்கு முக்கிய காரணம் தூக்கமின்மை.

 

 

சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற தூக்க முறைகளுக்கு பொதுவான காரணங்கள்.. ஸ்லீப் அப்னியா என்பது ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது 10 விநாடிகளுக்கு மேல் சுவாசத் தடை அதாவது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இதனால் நோயாளிகள் பெரும்பாலும் பெரிதும் குறட்டை விடுகிறார்கள்.

பிற நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, நாள்பட்ட சிறுநீரக நோயாளிகள் அசாதாரண சோர்வு அல்லது சங்கடத்தால் பாதிக்கப்படுவதால் அவர்களின் தூக்க சுழற்சியில் இடையூறு ஏற்பட்டு ஒரு நிலையான தூக்க முறை அவர்களுக்கு இருக்காது. இரவில் விழித்திருப்பதால் சிறுநீரகத்தை மோசமாகப் பாதிக்கிறது.

தொடர்ச்சியான முறையற்ற தூக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம் மேலும், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடி மருத்துவர் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இருப்பினும் வழக்கமான உடல் பயிற்சிகள், ஆரோக்கியமான உணவு அவசியம், தூங்க செல்வதற்கு முன் மொபைல் போனைப் பயன்படுத்த கூடாது ஏனென்றால் அது அமைதியான தூக்கத்துக்கு அது வழிவகுப்பது மட்டும் இல்லாமல் உடல்நல சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கவும் அது உதவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas