தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள்..

67வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இது 2019ம் ஆண்டுக்கான விருது ஆகும். இதில் தமிழகத்திற்கு மட்டும் 7 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார் டி.இமான். சூப்பர் டீலக்ஸ் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

 

அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக அசுரன் படம் தேர்வாகி இருக்கிறது.கே.டி. எனும் கருப்பு துரை படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதும், ஒத்த செருப்பு படத்தின் சிறந்த ஒலிக்கலவைக்காக ரசூல் பூக்கொட்டிக்கும், சிறப்பு பிரிவின் ஜூரி விருது ஒத்த செருப்பு படத்துக்கு கிடைத்திருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course