சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் காலமானார்

உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சசிகலா கணவர் நடராஜன் காலமானார். அவருக்கு வயது 76.

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். அப்போது அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Sasikala Husband

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

அப்போது, கர்நாடக சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, நாள்தோறும் மருத்துவமனைக்கு சென்று கணவரை கவனித்துக் கொண்டார். பின்னர் சிசிக்சை முடிந்து நடராஜன் நலமுடன் வீடு திரும்பினார்.

இரண்டு நாட்களுக்கு முன், திடீர் நெஞ்சு வலி காரணமாக நடராஜன் மீண்டும் க்ளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நடராஜன் இன்று அதிகாலை 1 மணி 35 நிமிடங்களுக்கு உயிரிழந்தார். நடராஜனின் உடல் இறுதி அஞ்சலிக்காக அவரின் பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top