தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்-தென்னக ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. எந்த ரயில் நிலையங்கள் மற்றும் தேதி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள்:

  • தாம்பரம் – நாகர்கோவில் இடையே அடுத்த மாதம் 26 முதல் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கம்.
  • அரக்கோணம் – ஜோலார்பேட்டை (தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்) ஏப்ரல் 10 முதல் இயக்கம்.
  • புதுச்சேரி – கன்னியாகுமரி வாரம் ஒரு முறை சிறப்பு ரயில் ஏப்ரல் 11 முதல் இயக்கம்.
  • புதுச்சேரி – மங்களூரு வாரம் ஒரு முறை சிறப்பு ரயில் ஏப்ரல் 15 முதல் இயக்கம்.
  • கோவை – சென்னை சென்ட்ரல் வாரம் ஒருமுறை விரைவு ரயில் ஏப்ரல் 16 முதல் இயக்கம்.
  • மதுரை – சென்னை எழும்பூர் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 17 முதல் இயக்கப்படுகிறது.
  • மதுரை – ஹஜ்ரத் நிஜாமுதீன் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஏப்ரல் 20 முதல் இயக்கம்.
  • கோவை – பெங்களூரு வாரம் 6 நாட்கள் விரைவு ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்.
  • கோவை – சென்னை சென்ட்ரல் வாரம் 6 நாட்கள் சதாப்தி ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்.
  • சென்னை சென்ட்ரல் – ஹஸ்ரத் நிஜாமுதீன் கரீப் ரத் வாரம் ஒருமுறை ரயில் ஏப்ரல் 10 முதல் இயக்கம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women