வாழைக்காய் சாப்பிடுவதன் மூலம் இவ்வளவு நன்மையா..

வாழைக்காயில் வைட்டமின் ஏ, சி, பி6 ஆகியவை அதிக அளவு உள்ளன. மேலும் வைட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃபிளேவின்), பி 3(நியாசின்), ஃபோலேட்டுகள், இ, கே முதலியவை காணப்படுகின்றன.

 

  • வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் எடை குறையும். ஏனெனில் இது குடலை சுத்தப்படுத்தி, அதில் உள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது.
  • வாழைக்காய் அதிக நார்ச்சத்து மற்றும் ஸ்டார்ச் கொண்டுள்ளதால், குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி,எளிதில் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் குறையும்.

 

  • வயிறு பருமனாக முக்கிய காரணம் அளவின்றி சாப்பிடுவது ஆகும். சிலருக்கு தாங்களே நினைத்தாலும் சாப்பிடும் அளவைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் பழுக்காத வாழைப்பழத்தினை உட்கொண்டால் சாப்பிட்ட நிறைவைத் தரும். அதனால் அதிகப்படியாக உணவினை உண்ண தோன்றாது. உடல் பருமனாவதைத் குறைக்கலாம்.
  • பச்சை வாழைப்பழம் அல்லது பழுக்காத பழம் அல்லது வாழைக்காய் ஆகிய மூன்றுமே ரத்த செல்களில் குளுக்கோஸ் உறிவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
  • வாழைக்காய் ஆகிய ரத்த செல்களில் குளுக்கோஸ் உறிவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

  • வாழைக்காய் ஜீரண உறுப்புகளுக்கு மற்றும், உணவுக்குழாய்களுக்கு போஷாக்கும் அளிக்கிறது. குடலில் இருக்கும் ப்ரோபயாடிக் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. இதனால் அசிடிட்டி வராமல் , குடல்களையும், வயிற்றையும் பாதுகாக்கும்.
  • வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் கவசமாய் செயல்படுகிறது.
  • வாழைக்காய் எலும்பிற்கு போதிய பலம் தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோசிஸ் ஆகிய நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.
  • வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உணர்ச்சிகரமான மனநிலை உண்டாவைத் தடுத்து மன அமைதியைப் பெறலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course