கர்ணன் பட பாடலுக்கு தடை…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தின் பண்டாரத்தி பாடல் கடந்த 2ம் தேதி வெளியாகியது. இந்த பாடல் குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இப்பாடலை நீக்க வேண்டும் என்றும் பாடலை நீக்கும் வரை இத்திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் பகுதியை சேர்ந்த ராஜா பிரபு பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

நடிகர் தனுஷ், பாடலாசிரியர் யுகபாரதி, பாடலைப் பாடிய தேவா, கர்ணன் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தணிக்கை துறை மண்டல அலுவலர், ஆகியோரை இது தொடர்பாக விளக்கம் கேட்டு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினார். மேலும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women