தேர்தல் விதிமுறைகளை மீறி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தடுக்க தவறியதாக தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதை கண்ட தி.மு.க தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் கூடி பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களை தடுக்கத் தவறியதாக தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் இருந்த தொண்டர்கள் அனைவரும் போலீசார் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். அண்ணா அறிவாலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினர் தடுப்புகளை வைத்து யாரும் கொண்டாட்டங்களில் ஈடுபடாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






