டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கொரோனா சிகிச்சை பணிகளை  சிறப்பாக மேற்கொள்வதற்காக ஒருங்கிணைந்த கட்டளை மையம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த மையத்தில் 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பெறப்படும் பொது மக்களின் அழைப்புகள் முறையாக  கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இந்நிலையில் இந்த மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு பார்வையிட்டார்.

 தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பரிசீலிக்கப்பட்டு தேவையான உதவிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதை நேரில் கேட்டறிந்தார். இந்த மையத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் ஏற்பாடு செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்வது ஆகிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  

அப்போது வந்த  தொலைபேசி அழைப்பை எடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதில் பேசிய வாணகரத்தை சேர்ந்த பெண் ஒருவரின் கோரிக்கையை ஏற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கை வசதி வழங்க உத்தரவிட்டார்.

இந்த  மையத்தின் மூலம் சென்னை மாநகரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள்  காலியிட விபரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும்  பெறப்படும் அனைத்து அழைப்புகளுக்கும் முறையான ஆலோசனைகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top