தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய கட்டணம் – தமிழக அரசு 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் உடனடியாக கிடைக்காத காரணத்தினால் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளை கொரோனா நோயாளிகள் நாடி வருகின்றனர். அதனால் மக்கள் கோரிக்கைக்கேற்ப தமிழக அரசு தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் அறிவித்துள்ளது.

மேலும், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணை மூலம் தனியார் ஆம்புலன்ஸ்கள் தங்கள் சேவைகளுக்கு குறிப்பிட்டுள்ள தொகையை மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

*ஆக்சிஜன் வசதியை கொண்ட ஆம்புலன்சில் 10 கி.மீ வரை ரூ.2000 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

*சாதாரண வயதுடைய ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீட்டர்களுக்கு ரூ.1500 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

*வென்டிலேட்டர் வசதியுடைய ஆம்புலன்ஸ்களில்  முதல் 10 கி.மீட்டர்களுக்கு ரூ.4000 மட்டுமே வசூலிக்க வேண்டும்.

*அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக ரூ.25 வசூலித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top