இன்றைய ராசிபலன் 15-05-2021

மேஷம்:

குடும்பத்தாரின் எண்ணங்களை  பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம்:  

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். பழைய பிரச்னைகள் தீரும்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:6, 9.

மிதுனம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.

கடகம்:

 கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 6.

சிம்மம்:

 பெற்றோர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:5, 6.

கன்னி:

உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 4, 6.

துலாம்:

 கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:   2, 9.

விருச்சிகம்:

 சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித  தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர் பார்த்த பணம் கைக்கு  வர தாமதமாகும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 5.

தனுசு:

மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மைகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்; அதிர்ஷ்ட எண்: 5, 6.

மகரம்:

பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொல்படி நடந்து கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 4, 6.

கும்பம்:

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:2, 9.

மீனம்:

தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும்.  வியாபாரத்தில் பங்குதாரர்களினால் பிரச்னை வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 3,9 .

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top