தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகார இடைக்கால அறிக்கையை ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் – அருணா ஜெகதீசன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் தனது இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்  போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். 

போராட்டத்தின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். இந்த நிகழ்வு தொடர்பாக 34 முறை நடத்தப்பட்ட விசாரணையில், 616 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 850 ஆவணங்கள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top