விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர்  கொரோனா தொற்றுக்கு பலியான சோகம்! 

கடந்த 2 வாரங்களுக்கு முன்பாகவே முகமது யூசுப்க்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப் நேற்றிரவு காலமானார்.

 மாநில அளவிலான பல்வேறு பொறுப்புகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம், எழுவர் விடுதலை உள்ளிட்ட பல போராட்டத்தில் முன்னின்று நடத்தியவர் யூசுப் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரின் இறப்பிற்ற்கு அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர்  அவர்கள் காலமானார் என்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது.  குடும்பத்தில் ஒருவராக என்னை ஏற்றுக் கொண்டவர். என் மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. அவருக்கு செம்மாந்த வீரவணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top