சென்னையில் பயங்கரம் – தந்தை கண் முன்னே  வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

 

 

சென்னை நெற்குன்றம், சக்தி நகர், பட்டேல் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரம்மதேவன். இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.இவருக்கு நாராயணன் ( 23 )என்ற மகன் உண்டு. இவர் தனது பாலிடெக்னிக்  படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் வேலை இல்லாமல் இருந்து வந்தார். இவர் வீட்டிற்கு  அருகில் உள்ள சாலையோர கடையில் சாப்பிட்டுவிட்டு வீட்டினை நோக்கி வந்து கொண்டிருந்த போது தனது வீட்டின் வாசலில் மோட்டார் சைக்கிளில் முகம் தெரியாமல் வந்த 7  பேர் கொண்ட குழு நாராயணனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

அந்த நேரத்தில் பிரம்மதேவன் வீட்டின் மாடியில் நின்று கொண்டுள்ளார்.இதனை கண்ட அவர்  அலறி அடித்து கீழே வந்து தனது மகனை பிடித்து கதறியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் நாராயணனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிறகு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிறகு இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், கொலையான நாராயணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த  ரவுடி தனஞ்செயன் என்பவருடன் நாராயணனுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தனஞ்செயன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாராயணனை அவரது வீட்டு வாசலிலேயே அவரது தந்தை கண் எதிரேயே வெட்டிக்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சாரதி (19), செல்வா (19) மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தனஞ்செயன் மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தந்தை கண் எதிரே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top