வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இருந்து Assistant Engineer பணியிடங்களை நிரப்ப  இந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த கல்லூரியில் 39 பணியிடங்கள் காலியாக உள்ளன.

 

ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 15.05.2021 இறுதி நாள் என்பதால்,  உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electricals/ Electronics/ Biomedical/ Instrumentation பாடங்களில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16,950/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 15.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top