மாத சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்

அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, மாத சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் நகராட்சியில் 120 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் இவர்களுக்கு, தற்போது வரை இந்த மாத சம்பளம் வழங்கவில்லை என கூறுகின்றனர். இதனால் ஆவேசம் அடைந்த தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த நகராட்சி சுகாதார உதவி ஆய்வாளர் முத்து முகமது போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உங்கள் சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top