இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி! 

இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை அவரது மகளான சௌந்தர்யா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் சிவாவுடன் ஹைதராபாத்தில் தனது ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இன்று தனது வீட்டில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இதனை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டு, நாம் ஒன்றாக இணைந்து இந்த கொரோனா தொற்றை வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு  அவர் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top