மருத்துவப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் ரத்து? பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்

கொரோனாவை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலம் வரை ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளையும்  மாநில அரசு கொள்முதல் செய்து வருவதை கருத்தில் கொண்டு மருத்துவப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலம் வரை முழுமையாக நீக்க வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் மாநில அரசுகளின் வரி வருவாய் பெரும் அளவில் குறைந்துள்ளதால், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மற்றும் மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்க வேண்டியுள்ள அரிசி மானிய தொகை ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய், மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில் இழப்பீட்டை ஈடுகட்ட சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.


கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை எதிர்கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை மாநிலத்தின் உற்பத்தியின் மதிப்பில் 3 விழுக்காட்டில் இருந்து மேலும் ஒரு விழுக்காடு உயர்த்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top