தாராப்பூரில் இருந்து தமிழகத்திற்கு வந்தடைந்த 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு  மேற்கு வங்க மாநிலம் தாராப்பூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று நள்ளிரவில் சென்னைக்கு வந்தடைந்தது. இதனை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தங்கி ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்றனர்.

பின்னர், ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு உரிமையான கண்டெய்னர் லாரிகளில் தலா 20 மெட்ரிக் டன் வீதம் நான்கு நிரப்பப்பட்டு அனைத்து விதமான ஆக்சிஜன் நிரப்பும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேற்குவங்கத்தில் இருந்து தற்போது வந்துள்ள 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனானது  சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பியுள்ளதாக  அவர் தெரிவித்தார். செய்தியாளர்கள் ஊரடங்கு குறித்து செய்தியாளர்கள் கேட்ட  கேள்விக்கு  தளர்வுகள் மேலும் கடுமையாக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas