மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் விலகல்! 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அக்கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் இக்காட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி கட்சியிலிருந்து விலகினார். அதற்கு முன்பாகவே நடிகர் நாசரின் மனைவியான காமிலா நாசர் விழித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபுவும் தற்போது அக்கட்சியிலிருந்து விலகியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை தொடர்ந்து சென்னை மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வேட்பாளராக நின்ற பத்மப்ரியாவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததாக தான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top