பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் சார்பில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு.

இந்நிலையில் அதற்கு முந்தைய நாளான 13ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதுடன், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகும் அச்சம் உள்ளது.
