கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி! பாஜக பார்முலாவில் இறங்கும் காங்கிரஸ் கட்சி.

கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி! பாஜக பார்முலாவில் இறங்கும் காங்கிரஸ் கட்சி.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. இருப்பினும், நேரம் செல்லச்செல்ல பாஜக வாக்கு வித்தியாசத்தில் முந்தியது. தொடர்ந்து தற்போதுவரை முன்னிலை வகித்து வருகிறது.

JDS Chief Ministerial Candidate of JDS

இதனால், கர்நாடகாவில் பெரும்பான்மை (104) இடங்களை கைப்பற்றியுள்ள பாஜக ஆட்சியை பிடித்து ஆட்சி அமைக்க போகிறது என்ற செய்தி பரவி வந்த நிலையில், 78 இடங்களில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 37 இடங்களை பிடித்துள்ள மதசார்பற்ற ஜனதாதள கட்சியுடன் இனைந்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு, ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை. இந்தநிலையில் 104 இடங்களில் பெரும்வாரியாக வெற்றிபெற்றிருந்தாலும் காங்கிரஸ் (78) மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் (37) கூட்டணியமைத்து ஆட்சியமைக்கும் உரிமையை கவர்னரிடம் கோர உள்ளது.

BJP Chief Minister Candidate

இதுகுறித்து கர்நாடக பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “கர்நாடக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் மக்கள் தீர்ப்பை அவமதிக்கின்றன. கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்து விட்டனர். மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரஸ் துடிக்கிறது. தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது, பின்வாசல் வழியாக, காங். ஆட்சியை பிடிக்க முயல்கிறது” என்று கூறினார்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் காட்சிகள் கூட்டணியுடன் ஆட்சியமைக்கும் சூழலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி முதல்வராக வாய்ப்புள்ளது. துணைமுதல்வர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Karnataka Elections 2018

காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சம்பந்தப்பட்ட பேச்சுக்களை துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.

தற்போது கர்நாடகாவில் நிலவும் இம்மாதிரியான சூழலில்தான், கோவா, மேகாலயா மற்றும் மணிப்பூரில் இறுதிநேர கூட்டணிகளை அமைத்து பாஜக அங்கு ஆட்சியை பிடித்தது. தற்போது அதே வழியை கர்நாடகாவில் காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது.

இருப்பினும், பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, 100% நாங்கள் தான் ஆட்சியமைப்போம் என்று உறுதியாக கூறியுள்ளார். பரபரப்பான இந்த சூழலில் யாரை வேண்டுமானாலும் ஆளுநர் ஆட்சியமைக்க அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


The situation post polling result in Karnataka is dragging as both BJP and Congress + JDS is approaching the Governor to form government. Though the chief ministerial candidate of BJP, Mr. Yeddiyurappa won in majority of constituencies, in the last moment Congress party and JDS made their alliance that comes up with majority in numbers to form government in Karnataka with the Chief Ministerial candidate H.D. Kumarasamy.


scroll to top