வேளாண் மசோதாக்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு நடிகர் சோனு சூட் ஆதரவு!

பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் வேளாண் மசோதாக்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர் அவர்களுக்கு நடிகர் சோனு சூட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

வேளாண் மசோதாக்களை எதிர்த்து ஹரியானா மாநிலம் விவசாயிகள் அம்பாலா வழியாக பேரணியாக சென்றனர் அவர்களை காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். இதற்கிடையில் பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மாநிலத்திற்குள் நுழையாமல் இருக்க ஹரியானா மாநில அரசு தனது எல்லைகளை மூடியது. இதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவையும் ஹரியானா அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Sonu Sood Tweeted in Favour of Farmers

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய சோனுசூட்டுக்கு மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் பல்வேறு பாஜகவினர் பாராட்டுக்களை தெரிவித்தனர். பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் பாஜகவினர் பாராட்டு தெரிவித்தனர் இதனால் அவரை பாஜக ஆதரவாளர் என்று சமூக ஊடகங்களில் குறிப்பிட்டனர். இந்நிலையில், மத்திய அரசால் இயற்றப்பட்ட விவசாய சட்டங்களை எதிர்த்து போராடிவரும் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் சோனு சூட், என் கடவுள் விவசாயி என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

scroll to top