பிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு!

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் நாள்தோறும் 1 ஜிபி டேட்டா என்ற புதிய சலுகை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

BSNL Unlimited offers

ரூ. 448-க்கு புதிய பிளான்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.448-க்கு புதிய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் நாள்தோறும் 1 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அத்துடன் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். அனுப்பு இயலும். ஜியோவின் அதிரடி சலுகைகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில், இந்தப் புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து வட மற்றும் தென்இந்தியா முழுவதும் 4ஜி சேவையை விரிவுபடுத்தவும், 5 ஜி சேவையை இந்திய சந்தையில் தொடங்கவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

scroll to top