நாட்டின் பல பகுதிகளில் கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் 75 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎம்ஐஇ எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரலில் வேலைவாய்ப்பின்மை விகிதம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அளவு 9.78 விழுக்காடாகவும் கிராமப்புறங்களில் இது 7.13 விழுக்காடாகவும் இருந்ததாக கூறியுள்ளது. எனினும் கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட போது முத்தத்தின் போது நிலவிய மோசமான நிலை இப்போது இல்லை என்றும் கூறியுள்ளது.
கடந்த மார்ச் முதல் தொடங்கியுள்ள கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த சில மாநிலங்கள் முழு பொதுமுடக்கத்தையும் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







