பெண்களின் கவலைகளில் ஒன்று பளபளப்பான சருமம் இல்லையே என்பது தான். சுற்றுச்சூழலால் பெரிதும் பாதிப்பது முகம் தான். குளிர் மற்றும் வெயில் காலங்களில் முகத்தில் உள்ள சருமம் பொலிவிழந்து விடுகிறது. இதற்கு பல்வேறு விதமான ஃபேஸ் பேக் – face pack இருந்தாலும் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்து உள்ள அகார் அகார் போன்ற இயற்கையான பொருட்கள் கொண்டு செய்யும் ஃபேஸ் பேக் பற்றி தெரிந்து கொள்வோம்.விலை மலிவும் எளிதாக கிடைக்கும் பொருள் என்பதால் அனைவரும் பயன்படுத்தி பார்க்கலாம்.

அகார் – அகார் என்பது என்ன?
அகார் – அகார் என்பது சிவப்பு நிற ஆல்காக்களில் இருந்து பெறப்படும் கடல் பாசி வகையைச்சேர்ந்தது. இதில் உள்ள புரதமானது அகரோ பெக்டோஸ் எனப்படுகிறது.இதில் உள்ள புரதங்கள் மற்றும் நுண்ணாட்டச்சத்துக்கள் சருமத்திற்கு தேவையான ஒன்று தான். இதனை யொத்த ஜெலட்டின் என்பது விலங்குகள் , பறவைகள் மற்றும் மீனின் எலும்பு ,மஜ்ஜைகளில் இருந்து பெறப்படுகிறது. ஒரு ஸ்பூன் அகார் – அகார் என்பது எட்டு ஸ்பூன் ஜெலட்டினுக்கு சமம். ஆகவே அகார் – அகார் கிடைக்கும் போது அதனை பயன்படுத்துங்கள்.

அகார்- அகார் ஃபேஸ் பேக்
ஒரு டேபிள் ஸ்பூன் அகார் – அகார் உடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலக்கவும். நேரடியாக அடுப்பில் வைத்து சூடாக்கினால் ஜெலட்டின் இறுகி விடும் ஆகவே டபுள் பாயிலிங் (double boiling) முறையில் சூடு செய்யவும்.

டபுள் பாயிலிங் முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். அதனுள் அகார் அகார் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து கரண்டியால் கலக்கவும். தேவையான அளவுக்கு உருகி பேஸ்ட் போல கிடைக்கும். இதனை பொறுக்கும் சூட்டில் புருவம் , கண்களைச் சுற்றி தவிர முகத்தின் பிற பகுதிகளில் தடவி ஊற விடவும்.
மெல்ல இந்த லேயர் காய்ந்ததும் முடிக்கு எதிர் திசையில் இழுக்கவும். பூனை முடிகள் , இறந்த செல்கள் அனைத்தும் ஒட்டிக்கொண்டு வந்து விடும். இது நல்ல ப்ளீச் செய்தது போல இருக்கும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







