மன அழுத்தமும் அது உணர்த்தும் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம்!

மன அழுத்தமும் அது உணர்த்தும் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம்!

படபடப்பு:

 

 

மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். 

தலைவலி 

 

 

அதிகமான அளவில் மன அழுத்தம் இருந்தால், மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்களிலும் அழுத்தம் மற்றும் துடிப்பு அதிகரிக்கும். இதனால் கடுமையான ஒற்றைத் தலைவலிக்கு ஆளாகலாம்.

மூக்கில் இரத்தம் வடிதல்

 

 

இரத்த அழுத்தமானது அதிகமாக இருந்தால், மூக்கில் இருந்து இரத்தம் வடியும். சாதாரணமாக நினைக்காமல் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

கூந்தல் உதிர்தல்

 

 

கூந்தல் உதிர்தலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான். . எனவே அதிக வேலைப் பளுவினால் டென்ஷன் மற்றும் மன அழுத்தம் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய பாட்டு கேட்பது, உடற்பயிற்சி செய்வது, புத்தக வாசிப்பு  மனதை இலகுவாக்கும்.

தற்காலிக ஞாபக மறதி 

மன அழுத்தம் இருந்தால், அடிக்கடி மறதி ஏற்படும். மன அழுத்தத்தில் இருக்கும் போது, எதையும் மனதில் பதிய வைக்க முடியாது 

அதிகப்படியான வியர்வை

 

 

எப்போதுமே வியர்த்துக் கொண்டிருந்தாலும், அது மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறி. 

நரைமுடி 

 

 

பொதுவாக நரைமுடியானது பரம்பரை வழியாக அல்லது அதிகப்படியான மன அழுத்தத்தினால் தான் ஏற்படும். 

தொடர்ந்து எரிச்சல் 

எப்போதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலானது ஏற்பட்டால், அது நிச்சயம் மன அழுத்தத்திற்கான அறிகுறியே. 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

மாதந்தோறும் ஏதாவது ஒரு காரணத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது என்றால், அதற்கு மன அழுத்தத்தினால், உடல் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

முதுமை 

மன அழுத்தமானது அதிகம் இருந்தால், சீக்கிரமாகவே முதுமைத் தோற்றமானது காணப்படும். 

இல்லறம்

மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், விறைப்புத்தன்மை குறைபாடு அல்லது முன்கூட்டியே விந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது. 

 

scroll to top