கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

பருவகாலங்கள் நியமப்படி சுழலுவது தான் இயற்கை , இதன் தாக்கம் எப்படி இருந்தாலும் அதனை மனிதன் எதிர் கொள்ளத்தான் வேண்டும். வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப சூழலை மாற்றிக் கொள்வது தான் சூழியல் தகவமைப்பு.ஆகவே கோடையை எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம்.

 

 

 

கோடை காலத்தின் உணவுகள்:

 •  மசாலாக்கள் நிறைந்த உணவுகள் , அசைவ உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பேக்கரி உணவுகளை அறவே தவிர்க்கவும்.
 • இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ் என உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள் மற்றும் எளிதாக செரிமானம் ஆகும் உணவுகள் உண்பது நல்லது.

 

 

 • அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் வெண்டைக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளி கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகள்.
 • நிறைய தண்ணீர் குடியுங்கள். நீர் மோர் மற்றும் நீராகாரம் சிறப்பு.
 • மாலை வேளைகளில் வெள்ளரிக்காய் சாலட், தர்பூசணி சூப், தக்காளி சூப், காய்கறி சூப் என குடிக்கலாம்.
 • வெயிலில் வெளியே செல்லாதீர்கள்!

 

 

 

 • கோடையில் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் தவிர்க்க வேண்டும்.
 • அத்தியாவசிய வேலையென்றால்  குடையை எடுத்துச் செல்லுங்கள்.
 • முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும்.
 • வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டி இருந்தால், கண்களுக்கு  கூலிங் கிளாஸ் அணிந்து கொள்ளலாம்.

கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடைகள்:

 • உடைகளை தேர்வு செய்யும் போது கோடைக்கு உகந்த பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
 • இறுக்கமான ஆடைகளை தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணியலாம்.
 • கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும் எனவே வெளிர் நிறத்தில் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
 • செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும்.

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas