தொப்பையை குறைக்க வேண்டுமா? தினமும் இரண்டு ஸ்பூன் இதை சாப்பிடுங்கள்!

Ancient food என பட்டியலிட்டால் அதில் சியா விதைகளுக்கு இடம் உண்டு.  சியா விதைகள் சால்வியா  என்னும்  தாவரத்திலிருந்து கிடைக்கும் சிறிய கருப்பு விதைகள் ஆகும். சால்வியா  தாவரம் புதினா குடும்பத்தைச்  சேர்ந்தது. இது, பழங்கால மாயர்களின்  பிரதான உணவாக இருந்தது.

இதனை ஆற்றலின் ஆதாரமாகப் பயன்படுத்தினர் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. போருக்குச் செல்லும்போது  அரசர்களும் வீரர்களும் சியா விதைகளைச் சாப்பிட்டுவிட்டுச் சென்றதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

சியா விதைகளுக்கு மாயன் மொழியில்  ‘வலிமை’ – chia என்று பொருள். 

சியா விதைகளில் உள்ள சத்துக்கள்:

சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்  மிகுதியாக உள்ளன. சியா விதைகளில்,  அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான லினோலிக் மற்றும் ஆல்பா-லினோலினிக் அமிலங்கள் உள்ளன. வைட்டமின்கள் ஏ, பி, இ  மற்றும் டி,  சல்பர், இரும்பு, அயோடின், மெக்னீசியம், மாங்கனீசு போன்ற கனிமச் சத்துக்களும் நிறைந்துள்ளன. சிதைந்த செல்களை புதுப்பிக்கும்  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளில் ஒன்று சியா விதை. 

சியா விதைகளின் பயன்கள் :

அதிகமான  நார்ச்சத்து  இருப்பதால், சியா விதைகளை  உண்ணும் போது, மிக விரைவில் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டுவிடும். அதனால் பசி கட்டுப்படுத்தப்படுகிறது.  உடல் எடை குறைக்கவும் இது உதவுகிறது. மலச்சிக்கலை போக்கும். செரிமான பாதையில் உள்ள புண்களை ஆற்றும். சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் வகையில் குளுக்கோஸ் மெட்டபாலிசத்தை தாமதமாக்கும். சருமத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளதால் சருமம் பொலிவு பெறும்.ஒட்டுமொத்தத்தில் உடலுக்கு தேவையான நன்மைகளை தருகிறது இந்த சின்னஞ் சிறு விதைகள். 

தொப்பையை குறைக்க சியா விதைகள் :

 

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க சியா விதைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் பாலில் சியா விதைகள் இரண்டு டேபிள் ஸ்பூன் கலந்து நான்கு மணி நேரம் முதல் ஓரிரவு வரை ஊற விடவும். பிறகு இதனுடன் தேவையான அளவு இயற்கை இனிப்பூட்டிகள் தேன் , கரும்புச் சர்க்கரை கலந்து இரவு உணவாக அல்லது காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் உணவு எடுத்துக் கொள்ளும் அளவு குறைகிறது. பசியில்லாமல் அதேசமயம் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவு இது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் சர்க்கரை அளவு குறைகிறது. இதயத்திற்க்கு வலு சேர்க்கும். மூட்டுவலிகள் குறைகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. இதன் விளைவாக வெகு வேகமாக உடல் எடையும் வயிற்றுக் கொழுப்பு குறைகிறது. 

எச்சரிக்கை : 

குழந்தைகள் , கர்ப்பிணி பெண்கள் , பாலூட்டும் தாய்மார்கள் இதனை தவிர்க்கவும். இந்த விதைகள் நன்கு ஊறிய பிறகு தான் உண்ண வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course